TODAY BIBLE VERSE IN TAMIL
Praise The Lord
Dear Brother and Sister
எனது குடும்பம் இந்திய மத பாரம்பரியம் ,சடங்குகள் செய்யும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.இயேசு எங்கள் குடும்பத்திற்கு வேண்டாதவர் அல்ல, அதேசமயம் மிகவும் முக்கியமானவரும் இல்லை. பத்தில் ஒன்றாக தான் அவர் எங்கள் குடும்பத்தில் வாழ்ந்து வந்தார். சிறு வயதில் நான் கிறிஸ்தவ பள்ளியில் படித்தும் அவர் மீது அந்த அளவிற்கு பெரிய நாட்டமில்லை. அவ்வப்போது ஊழியக்காரர்களை சந்திப்பேன். எனக்குள் இருந்த பல கேள்விகளுக்கு அவர்களிடத்தில் விடை கிடைத்தது. அவரைப்பற்றி தேடத்தொடங்கினேன்.
கர்த்தர் எதையும் ஆராய்ந்து பார்க்கும் கிருபையை எனக்கு கொடுத்திருந்தார். உலகத்தில் அவர் வந்து போனது, அவர் செய்த அற்புதம் என்று அவர் வேதாகமத்தில் சொல்லிய அனைத்தையும் இந்த உலகத்தில் தேடினேன். பல காரியங்கள் உலகத்தில் கண்டேன். ஒவ்வொரு சந்தேகமும் தீர தீர கொஞ்சம் கொஞ்சமாக என் உள்ளத்தில் வந்தார். இயேசு கிறிஸ்து என்னுடைய கர்த்தரும் இரட்சகரும் ஆனார். இன்று என் குடும்பம் முழுதும் ஆண்டவர் இயேசுவை தகப்பனாக ஏற்றுக்கொண்டோம்.
இன்று என் பல உறவினர் குடும்பங்கள் ஆண்டவரை அவர்கள் வாழ்வில் ஏற்றுக் கொண்டனர். இப்படி ஒரு தகப்பனுக்கு ஊழியம் செய்யவேண்டும் என்று நினைத்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த இணையதளம். இதன் மூலம் பல ஆத்துமாக்கள் அவர் அண்டையில் வந்து சேரவேண்டும். அவர் வார்த்தைகள் உலகம் முழுதும் பரப்ப வேண்டும் என்பதே இந்த இணையதளத்தின் நோக்கம்.
---------------------------------------------------------------------------------------------------------
My family was born into an ordinary family of Indian religious traditions and rituals. He lived in our family only one in ten. When I was a child, I attended a Christian school, but I didn't have that much interest in him. From time to time I meet with the missionaries. many of the questions within me were answered by them. I began to search for him.
The Lord had given me the grace to examine anything. I searched the world for everything he said in the Bible that he came and went into the world, the miracle he did. I have seen many things in the world. Little by little, every doubt came to my mind. Jesus Christ became my Lord and Savior. Today, my entire family accepted the Lord Jesus as our Father.
Today many of my relatives' families have accepted the Lord in their lives. This website was started with the intention of ministering to such a father. Through this, many souls must come to his side. The purpose of this website is to spread his words all over the world.